தனிஷ்க்  ஜுவல் நிறுவனத்தில் “ரிவா” புதிய திட்டம் அறிமுகம் 

கோவையில்  டைட்டன் தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனம் ரிவா என்ற ஒரு புதிய திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தில் திருமணங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு நகைகள் வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், தனிஷ்க் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர சேமிப்பு திட்டத்தை துவக்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம்  வாடிக்கையாளர்கள் திருமண நகைகளை எளிமையான முறையில் வாங்க உதவுகிறது. மாதம் 1,000 ரூபாயில் தொடங்கி 10 மாதம் வரையிலான சேமிப்பு திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதில் கடைசி மாதம்  சேமிப்பின் போது, வாடிக்கையாளர்கள் தங்கம் மற்றும் டைமென்ட்  போன்ற எந்த விதமான  நகைகளையும் வாங்கிக்கொள்ளலாம்.  அந்த சேமிப்பு திட்டத்தின் மூலம் வாங்கும் நகைகளுக்கு 12 மற்றும் 18 சதவீதம் வரை செய்கூலி மற்றும் தள்ளுபடிகளுடன் நகைகள் பெற்றுக்கொள்ளலாம்.

இது குறித்து டைட்டன் கம்பெனி லிமிடெட் நகைப்பிரிவின் சில்லறை விற்பனை நடவடிக்கை மேலாளர் திவ்ஜ்யோத் கவுர் பேசுகையில்,  இந்திய கலாசாரத்தில் தங்க நகைகளை வாங்குவதும் அலங்கரிப்பதும், குறிப்பாக திருமணங்களுக்கு முக்கியத்துவம் தருகிறது.  அதுபோன்று, இந்த “ரிவா” திட்டத்தின் மூலம் மணப்பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறந்த முறையில் தனிஷ்க் நல்ல டிசைன்களுடன், நல்ல விலையில்  உத்தரவாதத்துடன் வழங்குகிறது என்றார்.