சங்கரா கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் ஒரு நாள் தேசிய அளவிலான ICSSR கருத்தரங்கு நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்பவியல் துறை உதவிப்பேராசிரியர் சுலோச்சனா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ராதிகா தலைமை வகித்து உரை ஆற்றினார். சங்கரா கல்வி நிறுவனங்களின் துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன், இணை செயலாளர் சந்தியா ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முதல் அமர்வில் லோமன் ஹேர் கேர் நிறுவனர் ஸ்ரீ ஸ்ருதி லட்சுமி நரசிம்மன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: பெண்களின் தனித்துவ அடையாளத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது என்றும், தற்போதைய சூழ்நிலையில் பெண்களின் திறமைகளை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதையும் விளக்கினார்

இரண்டாம் அமர்வில் மனித கடத்தல் தடுப்பு பிரிவு, காவல்துறை கண்காணிப்பாளர் ரோசலின், கலந்து கொண்டு சாலை மற்றும் சாலைக்கு வெளியே பின்பற்றப்பட வேண்டிய நிபந்தனைகளை வலியுறுத்தினார். மேலும் மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துவதற்கான வழி முறைகளையும் விளக்கினார்.

மூன்றாவது அமர்வில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீனதயாளன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் பெண்களுக்கான சட்ட உரிமைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் எதிர்கொள்ளும் அறிவார்ந்த சட்ட தீர்வுகளையும் குறித்து விளக்கினார்.