சுகுணா சர்வதேச பள்ளியில் மாணவர் தேர்தல்

கோவை காந்திபுரம் டாக்டர்ஸ் காலனி பகுதியில் உள்ள சுகுணா சர்வதேச பள்ளியில் ஜனநாயக முறைப்படி மாணவர் மன்ற தலைவருக்கான தேர்தல் ஏழாவது ஆண்டாக நடைபெற்றது.

இதில் மாணவர் தலைவர், கலைத்துறை செயலாளர், விளையாட்டு துறை செயலாளர், என நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய பெயர்களை கொண்ட அணித்தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

கணிணி முறைப்படி, ஐ பேட் பயன்படுத்தி நடைபெற்ற வாக்கு பதிவை பள்ளியின் தாளாளர் சுகுணா மற்றும் சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, நிர்வாக இயக்குனர் அனீஷ் குமார், இயக்குனர் ஆண்டனி ராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி, தலைமையாசிரியை அனிதா, மழலையர் பள்ளி பொறுப்பாளர் மீரா ஆகியோர் தேர்தலை கண்காணித்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். ஒவ்வொரு பிரிவிலும் நான்காம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் என சுமார் 980 பேர் வாக்களித்தனர்.

இதே போல பள்ளியின் ஆசிரியர்கள் 92 பேரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தல் குறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில்: தேர்தல் முறைகளைப் பற்றி அறிந்து கொள்ள இந்த தேர்தல் பயனுள்ளதாக இருந்தது. கல்வி மட்டுமல்லாமல் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டோம் எனக் கூறினர்.