மத்தியில் பாஜக ஆட்சி தான் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்

ஹைதராபாத்தில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில், இனி வரும் 40 ஆண்டுகள் மத்தியில் பாஜக கூட்டணியே ஆட்சி நடத்தும் என், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்.

ஹைதராபாத் மாநிலத்தில் மாதாப்பூர் சர்வதேச கன்வென்சன் சென்டரில், பா.ஜ.க.வின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா, கட்சியின் மூத்த தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, ‘சாதி அரசியல், வாரிசு அரசியல், வாக்குவங்கி அரசியலுக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தெலங்கானா, மேற்குவங்கத்தில் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும். இந்த இரு மாநிலங்களிலும் குடும்ப ஆட்சி ஒழிக்கப்படும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசாவில் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பான வியூகங்களை கட்சித் தலைமை வகுத்து வருகிறது.

இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் ஆட்சி தான். இந்தியா உலகுக்கு தலைமை தாங்கும் நிலை உருவாகும். பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு தென்மாநிலங்களில் இருந்து வரும் என்று அனைவரிடத்திலும் ஒரு நம்பிக்கையும், கண்டுபிடிப்பும் உருவாகி உள்ளது.

குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி குற்றமற்றவர் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அரசமைப்பு சாசனத்தின் மீது பிரதமர் நம்பிக்கை வைத்துள்ளார். குஜராத் கலவர வழக்கின்போது சிறப்பு விசாரணைக் குழுவின் முன்பு மோடி ஆஜராகி விளக்கம் அளித்தாரை தவிர நடமாடவில்லை. ஆனால், இப்போது ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடகமாடி வருகின்றனர்.

பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை அழித்தது முதல் உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது என, மத்திய அரசு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது’ என, தெரிவித்தார்.