வடவள்ளியில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் & அப்ளையன்சின் புதிய கிளை திறப்பு

கோவை வடவள்ளியில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸஸ் நிறுவனத்தின் ஒன்பதாவது கிளை திறப்பு விழா நடைபெற்றது. இந்தக் கிளை தமிழ்நாட்டின் 33 வது கிளை என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாக இயக்குனர்கள் ராஜா ரவிச்சந்திரன் மற்றும் அருள்குமார் புதிய கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். எல்.ஜி நிறுவனத்தின் கோவை கிளை மேலாளர் செந்தில்குமார் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

திறப்பு விழா பற்றி இணை நிர்வாக இயக்குனர் அருண் கார்த்திக் கூறுகையில்: திறப்பு விழா சலுகைகள் மற்றும் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் கேஷ் பேக் ஆஃபர், டவுன் பேமெண்ட், ஈசி இ.எம்.ஐ போன்ற ஆஃபர் வசதிகளும், திறப்பு விழாவை முன்னிட்டு வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் பரிசு உள்ளது என தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய முன்னணி பிராண்டுகளின் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டு இருக்கிறது எனக் கூறினார்.