கோவையில் குடல் புண் பாதிப்புகள் மற்றும் அதன் தீர்வுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கருத்தரங்கம் மற்றும் மாநாடு நடைபெற்றது.

கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் எஸ்ஜி கேஸ்ரோ மருத்துவமனை சார்பாக குடல் புண் பாதிப்பு மற்றும் தீர்வுகள் குறித்த கருத்தரங்கு மற்றும் மாநாடு நடைபெற்றது. மேலை நாட்டு உணவு வகைகளை சாப்பிடுவதனாலும்,சிகரட் மற்றும் மதுபழக்கத்தினாலும் இந்தியாவில் மக்களிடையே தற்போது குடல் புண் நோய் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வயிற்றுவலி,வயிற்றுப்போக்கு,இரத்த கசிவு போன்ற நோய்கள் வருகிறது. எனவே பொதுமக்களுக்கு நோய்கள் வராமல் தடுப்பதற்காக லண்டன்,மற்றும் ஹைதராபாத்தில் இருந்து குடல் புண்ணிற்கான மருத்துவ அறிஞர்களை வரவழைத்து மருத்துவர்கள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த கருத்தரங்கள் அமைந்து இருந்தது. இந்த கருத்தரங்கு மாநாட்டில் 200க்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டு ஆலோசனை பெற்றனர்.