கோவையில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோவை ரயில் நிலையம் முன்பு உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சமீப காலமாக நடந்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக இளைஞர்களை கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்  தற்போது நடந்துவரும்

கல்வியில் பல்வேறு சீர்கேடுகள் நடப்பதற்கான காரணங்களை கண்டறிந்து மாநில அரசு முன் வந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.  இதை தொடர்ந்து கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாற்ற வேண்டுமென்றும், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்க கூடிய நீட் தேர்வை தமிழக மாணவர்களின் எதிர்ப்பை மீறி அரசு நடத்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கபட்டது.  இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் உருவாக்கிய ugc யை கலைத்துவிட்டு உயர்கல்வியை அமைக்க கூடாது என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தினர். . இதில் மாவட்ட துணை தலைவர் அஜ்மீா், தமுமுக செயலாளர் காதர் உசேன்,  ஊடக பிரிவு  செயலாளர் ஆசிக், ஊடக பிரிவு பொருளாளர் சிராஜ், அனைத்து மாவட்ட SMI நிர்வாகிகள், உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட சமூக நீதி மாணவர் இயக்கத்தின் நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.