இன்டஸ்ட்ரியல் சிட்டி ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

கோவை இன்டஸ்ட்ரியல் சிட்டி ரோட்டரி சங்கம் 2022 – 2023 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள சைமா ஹாலில் நடைபெற்றது.

இதில் புதிய தலைவராக கனகராஜ், செயலாளராக முகமது சபியுல்லா, துணை தலைவராக உமா பிரபு, பொருளாளர் நந்தகுமார், இணைச் செயலாளராக சதீஷ்குமார், டி.ஆர்.எப் சேர்மன் பிரபல வழக்கறிஞர் பிரபுசங்கர், ஒருங்கிணைப்பாளர் பிரேம் செந்தில், கிளப் அட்மின் மகேஸ்வரன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.

அதை தொடர்ந்து பல்வேறு பிரிவு நிர்வாகிகளாக பதவி ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஜி.எஸ்.டி ஆடிட் டோலா திருப்பதி, சிறப்பு விருந்தினராக பிரபல மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேல் கலந்து கொண்டனர்.