எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் டெட் டாக்ஸ் நிகழ்வு

‘உயர்வோம், தலை சிறப்போம்’

உலக அளவில் அறிவியல், தொழில்நுட்பம், அரசியல், கலாச்சாரம் பற்றி  சொற்பொழிவுகள் வழங்கும்  பிரபலமான டெட் (TED talks) அமைப்பும், கோவையின் முன்னணி கல்வி நிறுவனமான எஸ்.எஸ்.வி.எம் கல்வி குழுமமும் இணைந்து வழங்கிய இளம் மாணவர்களுக்கான கருத்தரங்கு சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

இன்னும் உயர்வோம், மேலும் தலை சிறப்போம் என்ற தலைப்பில் இந்த நிகழ்வு நடந்தது.

மாணவர்களுக்கான இந்தக் கருத்தரங்கு எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன் மற்றும் அறங்காவலரும், செயலாளருமான மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது.

மேலும் காலை துவங்கிய கருத்தரங்கு நான்கு அமர்வுகளாக நடைபெற்றதுடன், ஒவ்வொரு அமர்விலும் டெட் எக்ஸ் குழுவினை சேர்ந்த பேச்சாளர்கள் குறிப்பிட்ட தலைப்பில் தங்களது உரையை நிகழ்த்தினர். இத்துடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

சிறப்பு விருந்தினராக தூதர் ஸ்ரீனிவாசன், IFS Rtd. கலந்து கொண்டு முதல் அமர்வில் மாணவர்கள் மத்தியில் உரையாடினார். இவர் இந்திய வெளியுறவு சேவை (Indian Foreign Service) என்ற புத்தகத்தை பள்ளியின் நிர்வாக குழுவினருக்கு வழங்கினார். பின்னர் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.