சந்திரா ஹுண்டாய் சார்பில் புதிய வெண்யூ கார் அறிமுக விழா

கோவை  ஆர்.எஸ் .புரம் பகுதியில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டல் வளாகத்தில் சந்திரா  ஹுண்டாய் சார்பில் புதிய வெண்யூ கார் அறிமுகவிழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற,  ஸ்ரீ அன்னபூரணா ஹோட்டல்ஸ்  செயல் இயக்குனர் விவேக் மற்றும் சந்திரா ஆட்டோமொபைல்ஸ் இயக்குனர் ரஞ்சித் கோவிந்தராஜ்   இணைந்து புதிய வெண்யூ காரை அறிமுகம் செய்து வைத்தனர்.

மேலும், இந்த விழாவில் சந்திரா  ஹுண்டாய் துணை விற்பனை மேலாளர் மணிகண்ட வாசகன் பங்கேற்றார்.