பிற மதத்தை மதிக்க வேண்டும் – சீனா கருத்து

நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளர்கள் சர்ச்சையான கருத்து பேசியதற்கு, பிற மதங்களை மதிக்க வேண்டும் என சீனா கருத்து தெரிவித்துள்ளது.

பாஜகவை செய்தி தொடர்பாளர்களான நவீன் ஜிந்தால், நுபுர் சர்மா இருவரும் நபிகள் நாயகம் பற்றி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உலகம் முழுவதும் உள்ள அரபு நாடுகள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.

இந்தியா இதற்கு விளக்கமளித்து, இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. இது மட்டுமல்லாமல் அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது சீன அரசு, இந்திய நாட்டிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.
அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் இதுகுறித்து தெரிவித்ததாவது, பிறரின் நாகரிகங்களுக்கும், மதங்களுக்கும் ஒவ்வொருவரும் மதிப்பளிக்க வேண்டும். சமமான முறையில் சேர்ந்து வாழவேண்டும் என சீனா கருதுகிறது. இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நினைக்கிறோம் என கூறியிருக்கிறார்.