ஏ.ஐ.சி ரைஸ் சார்பில் ‘லெட்ஸ் ஸ்டார்ட் அப்’ நிகழ்ச்சி

கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள ஏ.ஐ.சி ரைஸ் அடல் இன்குபேஷன் சென்டர் சார்பில் ‘லெட்ஸ் ஸ்டார்ட் அப்’ என்னும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் கோவையை சுற்றியுள்ள பல்வேறு துறையினைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள், தொழில் முனைவோர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் ஏ.ஐ.சி ரைசின் செயல்பாட்டு இயக்குநர் நாகராஜ் வரவேற்புரை வழங்கினார்.

இதில் ஸ்டார்அப் தமிழ்நாடு தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மிஷன் இயக்குநரான சிவராஜன் ராமநாதன் மற்றும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் (நாஸ்கம்) தேசிய சங்கத்தின் துணை இயக்குநர் உதயசங்கர் மற்றும் தைரோ கேர்சின் நிறுவனர் வேலுமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

இதனைத் தொடர்ந்து ஏ.ஐ.சி ரைசின் தலைமை நிர்வாக அதிகாரி மதன் ஏ செந்தில் தொழில் முனைவோர்கள் தங்களது ஸ்டார்ட்அப்களை தொடங்குவதற்கு உதவியாக இருக்கும் நிதியைப் பற்றி விவாதித்தார்.

ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்க ஸ்டார்ட்அப் இந்தியா முதலீட்டு நிதி திட்டத்தின் கீழ் ஏஐசி ரைஸ் பெற்ற முதலீட்டு நிதி அறிவிப்பான ஸ்டார்ட்அப் இந்தியா சீட் ஃபண்ட் ஸ்கீம் தொடங்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் ஏ.ஐ.சி ரைசில் இவ்வாண்டு இணைந்த 20 புதிய தொழில் முனைவோர்கள் தங்களின் ஸ்டார்ட்அப்கள் உடன் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரத்தினம் ஸ்டார்ட்அப் பள்ளி அறிமுகப்படுத்தப்பட்டது.