என்.ஜி.பி கல்லூரியில் தேசிய அளவிலான தொழில் நுட்ப கருத்தரங்கம்

கோவை மாவட்டம், காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள டாக்டர் என்.ஜி.பி தொழில் நுட்ப கல்லூரியில் பொறியியல் துறைகளான BME, Civil, CSE, ECE, EEE, IT, Mechanical மற்றும் MBA ஆகிய துறைகளுக்கு தேசிய அளவிலான தொழில் நுட்ப கருத்தரங்கம் “HENOSIS 2k22” நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பல்வேறு துறைகளை சார்ந்த வல்லுநர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இக்கல்லூரியின் தலைவர் டாக்டர் நல்ல.ஜி.பழனிசாமி தலைமை உரை வழங்கினார். செயலாளர் டாக்டர் தவமணி பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார். பின்னர், கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி ஓ.டி.புவனேஸ்வரன் மற்றும் கல்லூரி முதல்வர் பிரபா ஆகியோர் கருத்தரங்கின் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் குறித்து உரையாற்றினார்கள். இவ்விழாவானது இயந்திரவியல் துறைத்தலைவர் நந்தகுமார் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவிற்கு தேசிய அளவிலான பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சார்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்று பரிசுகளைப் பெற்றனர்.