இரத்தினம் கல்லூரியில் விளையாட்டு விழா

கோவை, இரத்தினம் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர் 16 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் 100, 200, 400 மீட்டர், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கலப்பு தொடர் ஓட்டம் போன்ற தடகள போட்டிகள் மற்றும் சதுரங்க ஆட்டம், மேசை பந்தாடம், சுண்டாட்டாப் பலகை (CAROOM) மற்றும் பல போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர் ஈரோடு மகேஷ் பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்விற்ற்கு முதல்வர் முரளிதரன், தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம், பல்வேறு பள்ளிகளின் டீன்கள், துணைத் தலைவர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை உடற்கல்வி இயக்குனர் ரமேஷ், கால்பந்து பயிற்சியாளர் சதீஸ்குமார், கபடி பயிற்சியாளர் கலைசெல்வன், கிரிக்கெட் பயிற்சியாளர் அய்யப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.