அகில இந்திய நாய்கள் கண்காட்சி கோவையில் நாளை(22.4.17) துவக்கம்

கோவை, ஆனைமலை, கெனல் கிளப் சார்பில், 3வது அகில இந்திய நாய்கள் கண்காட்சி, பீளமேடு, இந்துஸ்தான் கல்லுாரி வளாகத்தில், நாளை(23.4.17) நடக்கிறது.

கண்காட்சியில், தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார், 350க்கும் மேற்பட்டநாய்கள் பங்கேற்கின்றன. மின்பின், பக், பீகிள், பூடுல், மேலினீயஸ், லாசா அப்சா, ஜேக்ல் ரசல் டால்மேஷன், கிரேட் டென், புல் மாஸ்டிப், ஜெர்மன் ஷெப்பர்டு ரகங்கள் உட்பட இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளை பூர்வீகமாக கொண்ட நாய் இனங்களும் பங்கேற்கின்றன.

இந்திய பூர்வீக நாய் இனங்களான ராஜபாளையம்,கோம்பை, சிப்பிபாறை, கண்ணி மற்றும் நாட்டு இன நாய்களும் அதிகளவில் முதல்முறையாக இக்கண்காட்சியில் இடம் பெறவுள்ளன.

தமிழ்நாடு காவல்துறை மோப்ப நாய்களும் கண்காட்சியில் பங்கேற்று பார்வையாளர்களை கவரவுள்ளன. தவிர, நாய்களுக்கான உணவு மற்றும் மருத்துவ ஸ்டால்களும் அமைக்கப்படுவதால், நாய் பிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கிளப் தலைவர் ரவி, துணை தலைவர் அர்தநாரி, செயலாளர் குமரன் ராகவேந்திரன், பொருளாளர் சரவணகுமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.