கே.ஜி.எப்.பார்த்து மகிழ்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள்

எஸ்.என்.எஸ்.கல்லூரி மற்றும் வணக்கம் தோழர்களே அமைப்பினர் இணைந்து, பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களை கே.ஜி.எப் திரைப்படத்திற்கு அழைத்து சென்று மகிழ்ந்தனர்.

கோவையை சேர்ந்த வணக்கம் தோழர்களே அமைப்பின் நிறுவனர் நவீன் ரோஷன், எஸ்.என்.எஸ்.கல்லூரியுடன் இணைந்து பல்வேறு சமுதாயப் பணிகளை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் ஆதரவற்ற குழந்தைகளை அழைத்து சென்று, பீஸ்ட் படத்தை பார்க்க வைத்த இவ்வமைப்பினர், தற்போது எஸ்.என்.எஸ்.கல்லூரியுடன் இணைந்து, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீர்ர்களை கே.ஜி.எப். திரைப்படத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

குறிப்பாக தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு விளையாட்டுகளில் வென்று பதக்கம் பெற்ற பாராலிம்பிக் வீர்ர்களை அழைத்து சென்று அவர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர்.

இதுகுறித்து, வணக்கம் தோழர்களே அமைப்பின் நிறுவன தலைவர் நவீன் ரோஷன் கூறுகையில், நானும் எனது நண்பர்கள் இந்த அமைப்பின் வாயிலாக சேர்ந்து, சாதாரணமாக சில உதவிகளை பிறருக்குச் செய்யத் துவங்கியதாகவும், தற்போது, பாராலிம்பிக் வீர்ர்களுக்கு சிறிது ரிலாக்ஸ் அளிக்கும் விதமாக வெளியே அழைத்துச் செல்ல முடிவு செய்து திரைப்படத்திற்கு அழைத்து வந்ததாக தெரிவித்தார்.

எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களுடன் இணைந்து இந்த பணியை செய்ததாக கூறிய அவர், பொதுவாக திரைப்படம் வெளியாகும்போது 100 அடி உயரத்திற்கு கட்டவுட் வைத்து கொண்டாடுவதை விட, மாற்றுத்திறனாளி வீரர்களின் திறமையை பாராட்டும் விதமாகவும், அவர்களது மன சோர்வு நீங்கும் விதமாக இவ்வாறு செய்துள்ளதாக தெரிவித்தார்.