சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் – விழா

சச்சிதானந்த  ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில்கர்மவீரர் காமராசரின் 116ஆம் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.

விழாவில், காமராசரின் திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கல்வி ஆலோசகர் நல்லாசிரியர் வெ. கணேசன் பள்ளித் துணை முதல்வர் முனைவர் சு. சக்திவேலு, மாணவி கே.பி. அக்ஷரா, புவியியல் ஆசிரியர் . முருகேசன்கணித ஆசிரியை இரா. பூர்ணிமா ஆகியோர் காமராசரின் சிறப்புகளைப் போற்றும் வகையில்  உரையாற்றினர். வணிகவியல் ஆசிரியர் கே.எஸ் சேஷகுமார் சிறப்புப்பாடல் இசைத்தார்.

பள்ளிச் செயலர்  தமிழ்ச் செம்மல் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், தனது தலைமை உரையில்,படிக்காத மேதையாக விளங்கிய கர்மவீரர் காமராஜர் முதல்வர் பதவியில் இருந்தபோதும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். தனக்கு இருந்த அதிகாரத்தினை ஒருபோதும் தன் நலனுக்காகப் பயன்படுத்தாதவர். நாட்டுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு மாமேதை. கல்வி வளர்ச்சியை முதன்மையாக நினைத்தவர். அவர் காட்டிய வழியில் கல்வியறிவில் சிறந்து விளங்குவதுதான் மாணவர்கள் அவருக்குச் செய்யும் நன்றிக்கடனாகும் என்று பேசினார்.

முன்னதாக,விழாவிற்கு வந்திருந்தவர்களை பள்ளி முதல்வர் இரா. உமாமகேஸ்வரி வரவேற்றார்தமிழாசிரியர் முனைவர் பு.இரகு    நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத்  தமிழாசிரியர்   முனைவர் .சிவக்குமார் செய்திருந்தார்.