தமிழ்நாடு வேளாண் பல்கலையில் கோடைக் கால நீச்சல் பயிற்சி முகாம்

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம் வரும் 23 ஆம் தேதி துவங்குகிறது.

இப்பயிற்சியினை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைக்க உள்ளார்.
மூன்று ஆண்டு கால இடைவெளிக்குப் பின்பு, கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் நீச்சல் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

23 ஆம் தேதி முதல் ஜூன் 21ம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. ஐந்து வயதுக்கு மேல் உள்ள அனைவரும் பங்கேற்று பயிற்சி பெறலாம்.

இந்த பயிற்சியில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 9486775495 , 0422 6611279 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.