தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

2 ஆண்டுகளுக்கு பின் வெகு விமர்சையாக தஞ்சை பெரிய கோயில் சித்திரை தேரோட்டம் புதன் கிழமையன்று தொடங்கியது

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது, மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவு காரணமாக விழா முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இன்று வெகுவிமரிசையாக தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

2 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.