பார்க் பொறியியல் கல்லூரியில் சர்வதேச பயிற்சி பட்டறை

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் Geo informatics துறையின் சார்பாக Google Earth Engine பற்றிய சர்வதேச அளவிலான மூன்று நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

இந்த பயிற்சி பட்டறையில் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு Google Earth Engine செயல்பாடு பற்றி செயல்முறை விளக்கத்துடன் தெளிவுபடுத்தினர்.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் மோகன் குமார் வரவேற்றார்.
பார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி தனது உரையில், Geo informatics துறையின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்ததோடு இப்படிப்பட்ட முயற்சிகளை ஊக்குவிக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, நியூ டெல்லியின் தலைவருக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வை இணைய வாயிலாக நியூ டெல்லி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தலைவர் அனில் தத்தாத்ராய ஸஹஸ்ரபுதே (Anil Dattatraya Sahasrabudhe) துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், Environmental, Geo Informatics போன்ற புதிய துறைகளை ஆர்வத்துடன் துவக்கி கல்வித்துறையில் முன்னோடியாக விளங்கும் பார்க் கல்விக் குழுமத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

பொறியியலில் சில இணை/துணை பாடங்களை கற்றுக்கொண்டு பொறியாளர்கள் வேலை தேடுபவர்களாக அல்ல வேலை வழங்குபவர்களாக வளர வேண்டுமென்று கூறினார்.

மேலும் இணையதளம் மற்றும் செயற்கைகோள்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் கல்விக்காகவும் பெரிதும் பயன்படுகிறது என்று கூறி Geo Informatics துறையினரை பாராட்டினார்.

துருக்கியின் Yildiz பல்கலைக்கழகத்தின் புவியியல் (Geomatic) துறையின் பேராசிரியர் Fusun Balik Sanli, UTM மலேசியா பல்கலைக்கழகத்தின் Geo Information துறை பேராசிரியர் கஸ்தூரி தேவி மற்றும் திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம், கட்டிட பொறியியல் துறை பேராசிரியர் சரவணன் உலகில் எவ்வாறு Google Earth Engine பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி கூறினர்.