கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் பெண்கள் புற்றுநோய்க்கான  விழிப்புணர்வு  பேரணி !

 

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மற்றும்  இந்திய புற்றுநோயியல் கூட்டமைப்பும்  இணைந்து, கோவையில் ‘பெஸ்ட் ஆப் அஸ்கோ 2018’  (BEST OF ASCO 2018) என்ற  மாநாட்டையும்  பெண்களுக்கான  புற்றுநோய் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியும் (Walkathon)இன்று(8.7.2018)  நடைபெற்றது.

இந்த வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லுாரியில் துவங்கி கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை வரை நடைபெற்றது. இந்த பேரணியை  மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார். இதில்  800க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மருத்துவர்கள், புற்றுநோயை வென்றவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர், மற்றும்  மாணவ, மாணவியர்கள்,  பங்கேற்று பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு வாசக பலகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மற்றும் இந்திய புற்றுநோயியல் கூட்டமைப்பும்  இணைந்து, ‘பெஸ்ட் ஆப் அஸ்கோ 2018’ மாநாட்டினை

லீ-மெரிடியன் ஹோட்டலில் நடத்தின. இந்த  மாநாட்டினை அமெரிக்க புற்றுநோய் சொசைட்டி அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை உலகின் பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது.

இதில், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றிய சிகிச்சை முறைகள், தற்போதுள்ள நவீன சிகிச்சை முறைகள், வரும் முன் தடுப்பு முறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன.

இரண்டு நாள் கருத்தரங்கில், பல்வேறு கருத்துக்கள்  இடம் பெற்றன. புற்றுநோயை வரும் முன் காக்கும் முறைகள், வந்த பின்னர் அதற்கான அதிநவீன சிகிச்சை முறைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயை தவிர்க்க, இம்யூனோ தெரபி சிகிச்சை, புற்றுநோய் ஏற்படாதவகையில் நீண்ட நாட்கள் கட்டுப்படுத்தும்.

‘பெஸ்ட் ஆப் அஸ்கோ 2018’ மாநாட்டின் இயக்குனர் டாக்டர் பரத் ரங்கராஜன் கூறுகையில், ‘‘ இந்திய புற்றுநோய் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் போன்ற கருத்துக்களை மருத்துவர்கள் பரிமாற்றம் செய்து கொண்டனர். இந்த அரிய வாய்ப்பினை இந்திய அளவிலிருந்து வந்திருந்த பல்வேறு மருத்துவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.’’ என்றார்.

கருத்தரங்கை துவக்கி வைத்து கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி பேசுகையில், ‘‘ உலகில் புற்றுநோய் மருத்துவத்தில் ஏற்படும் அதிநவீன மாற்றங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுவது, மருத்துவர்களுக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு. இதுபோன்ற மாநாடுகள், கருத்தரங்குகள், கல்வி வகுப்புகளை நடத்துவதில் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை முன்னோடியாக உள்ளது. பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது. இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்த பரிசோதனைகள் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் எளிமையான முறையில் செய்து கொள்ள அனைத்து கருவிகளும், மருத்துவ வசதிகளும் உள்ளன. இந்த பரிசோதனைகளை சலுகை விலையிலும், இலவச மருத்துவ முகாம் நடத்தியும் மருத்துவமனை சேவை செய்து வருகிறது. இதை மகளிர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,’’ என்றார்.

கருத்தரங்கையொட்டி நடந்த ’வாக்கத்தான் 2018’ பேரணி பொதுமக்களிடையே பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.