டாக்டர்.ஆர்.வி. கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

டாக்டர்.ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியும், கோவை யங் ஸ்டார்ஸ் நிறுவனமும் இணைந்து மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது.

இம்முகாமில் சபரி லாஜிஸ்டிக்ஸ், ஸ்டெல்லார் சொல் யூசன்ஸ், நவ நிதி, ஏக்விடாஸ் வங்கி, எக்ஸ்ஃபிளோர் ஐ.டி கார்ப்பரேஷன், அட்வென்ட் சிஸ்டம்ஸ், ஃபின்கவர், யங் ஸ்டார்ஸ், ஸ்ரீ வாசு இன்டஸ்டிரீஸ், ஜீ.வி.அக்வா பிராடக்ட்ஸ், ஏகன் டெக்னாலஜி, தாய் அக்வா, சென்னை சில்க்ஸ், போத்தீஸ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று நேர் காணல் நடத்தியது.இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்வின் நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ரூபா அனைவரையும் வரவேற்றார். யங் ஸ்டார்ஸ் மையத்தின் இயக்குனர் ராஜசேகர் தலைமையேற்று தலைமை உரையாற்றினார். அவர் பேசிய உரையில், “அனுபவம் தான் கடவுள். அந்த அனுபவத்தின் மூலம் நாம் எந்த ஒரு வேலை வாய்ப்பையும் பெறலாம். வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. வேலை தேடுவோரரையும், வேலை தரும் நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக செயல் படும் பயிற்சி மையங்கள் நிறைய உள்ளன. இதன் மூலம் மாணவர்கள் பயிற்சி பெற்று வேலை வாய்ப்புகளைப் பெறலாம்” என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் குன்னூர், மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் இயங்கும் அரசுப் பேருந்தின் நடத்துனர் மற்றும் சமூக சேவையாளர் கனகசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து யங் ஸ்டார்ஸ் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தால் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக மேலாளர் சீனிவாசன், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.