கே.பி.ஆர் கல்லூரியில் ரேக்ளா ரேஸ்

கோவை, கே.பி.ஆர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் சென்ட்ரல் இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு காளையர் திருவிழா எனும் ரேக்ளா போட்டி கே.பி.ஆர் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டி 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெறுகிறது, இப்போட்டியில் கோவை தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் சுமார் 300க்கும் மேற்பட்ட வண்டிகள் இப்போட்டியில் பங்கு பெற்றன.

இப்போட்டியில் முதல் பரிசு பெரும் காளைகளுக்கு ஹோண்டா ஆக்டிவா வண்டியும், இரண்டாம் பரிசு பெரும் வண்டிக்கு இரண்டு பவுன் தங்க நாணயமும், மூன்றாம் பரிசு பெறும் வண்டிக்கு ஒன்றரை பவுன் தங்க நாணயம் என முதல் பத்து இடங்கள் வரை வெற்றி வரும் வண்டிகளுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்ட து.

இப்பரிசுகள் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரண்டு பிரிவினருக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டது.

இப்போட்டியை கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களில் தலைவர் கே.பி.ராமசாமி தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் அகிலா, கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் பாலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படங்கள்: சதீஷ் பாபு.பொன்ராஜ்