என்.ஜி.பி கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லுாரியின் உயிரியல் மருத்துவ பொறியியல் துறை சார்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் நிதி உதவியுடன் ஒருநாள் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.

“பாஸ்பேலினோசட்யடால் 3 இல் சமீபத்திய முன்னேற்றம் கைனேஸ். ஒரு புதுமையான அனுசரிப்பு, நுண்ணறிவு மற்றும் புற்றுநோய் சிகிச்சை அமைப்பு பயோமெடிக்கல் சிஸ்டம் டிசைன்” என்ற தலைப்பில் நடைபெற்றது.

உயிரி மருத்துவ பொறியியல் பிரிவு துறைத்தலைவர் சுமித்ரா வரவேற்புரை வழங்கினார். இக்கருத்தரங்கத்தின் முக்கியத்துவம் மற்றும் இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி கல்லூரியின் முதல்வர் பிரபா கூறினார்.

இந்நிகழ்வில் கே.எம்.சி.ஹெச். டாக்டர் கமலேஷ்ரன் தொடக்கவுரை மற்றும் மருத்துவமனையின் வல்லுனர் முகமது ஜீனத் பி.இ.டி/சி.டி. இயந்திர பாகங்களின் செயல்பாட்டுக் கொள்கை மற்றும் தரக் கட்டுப்பாடு பற்றி பற்றி பேசினர்.

பின்னர் பி.எஸ்.ஜி தொழில் நுட்பக் கல்லூரியின் பேராசிரியரான பானு ரேகா புற்றுநோய் கண்டறிதல் மற்றும் அதில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்கு பற்றி பேசினார். “ஸ்டெம்செல் மற்றும் கேன்சர் ஜீனோமீகிஸ் மையம், எ.எம்.ஐ பயோசயின்ஸ்”, இன் இயக்குனரான மகேஷ், சுயவிபரம் மற்றும் ஸ்டெம் செல் வெடிப்புகள் மற்றும் மார்பக புற்றுநோய் பற்றி உரை ஆற்றினார்.