என்.ஜி.பி.கல்லூரியில் ‘ஸ்டாண்டர்ட்ஸ் கிளப்’ துவக்க விழா

டாக்டர் என்.ஜி.பி.தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் துறை மற்றும் இந்திய தரநிலைகள் பணியகம், கோயம்புத்தூர் பிரிவு இணைந்து நடத்திய “ஸ்டாண்டர்ட்ஸ் கிளப்” துவக்க விழா டாக்டர் என்.ஜி. பி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.

இந்த விழாவில் கே.எம்.சி.ஹெச் குழுமத்தின் தலைவர் டாக்டர் நல்லா.ஜி.பழனிசாமி மற்றும் டாக்டர் என்.ஜி. பி. கல்விக் குழுமங்களின் செயலர் டாக்டர் தவமணி D பழனிசாமி தலைமை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய தரநிலைகள் பணியகம், கோயம்புத்தூர் பிரிவு சயின்டிஸ்ட் -பி, தரூரு அகில் மற்றும் ஹால்மார்க் முகவர், விஜய் பாலசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இயந்திரவியல் துறையின் துறைத்தலைவர் நந்தகுமார் பங்கேற்பாளர்களை வரவேற்றுப் பேசினார். முதல்வர் பிரபா தர சான்றிதழ் பற்றிய முக்கியத்துவதைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.