கண்ணதாசன் விருது வழங்கும் விழா

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் கண்ணதாசன் கழகம் சார்பில், 11 ஆம் ஆண்டு கண்ணதாசன் விருது வழங்கும் விழா கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் இன்று(24.06.2018) நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கே.எம்.சி.எச்., மருத்துவமனை தலைவர் நல்ல ஜி பழனிசாமி கலந்து கொண்டு பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எழுத்தாளர் மாலன் அவர்களுக்கு கண்ணதாசன் விருதினை வழங்கினார். மேலும், நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்  நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன், பொதிகை தொலைக்காட்சி இயக்குனர் ஆண்டாள் பிரியதர்ஷினி, எழுத்தாளர் மரபின்மைந்தன் முத்தையா, ஜெயந்தி ஸ்ரீ பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.