வேலம்மாள் பள்ளியில் பத்மஸ்ரீ விருது பெற்ற சாதனையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முகப்பேர் வேலம்மாள் முதன்மைப் பள்ளி, வளாகத்தில் பசுமைப்புரட்சி பாதுகாவலராக அறியப்படுபவரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரதா திம்மக்கா, காடுகளின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் துளசி கவுடா, புகழ்பெற்ற பாடகர் டாக்டர் காயத்திரி சங்கரன் மற்றும் இளம் ஜல்லிக்கட்டு பயிற்சியாளர் யோகதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவை முன்னிட்டு, விருது பெற்றவர்களை முதன்மைக் கல்விப் பொறுப்பாளர் ஜெயந்தி ராஜகோபாலன் மற்றும் முதுநிலை முதல்வர் பொன்மதி ஆகியோர் கௌரவித்தனர். பின்னர் மாணவர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வு மாணவர்களுக்கு மிகவும் சிறந்த வாய்ப்பாக இருந்தது, ஏனெனில், இது சமூகத்திற்கும் தேசிய நலனுக்கும் ஒருவர் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து பல ஆயிரக்கணக்கான வேலம்மாள் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் ஊக்கம் அளிக்கும் நிகழ்வாக அமைந்திருந்தது.

‘உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’ என்ற எண்ணத்தை பிரதிபலிப்பதாக அமைந்து வேலம்மாள் வளாகத்தில் நடைபெற்ற இந்தத் தனித்துவமான விழாவானது, பெண்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்து ஒரு கூடுதல் பாராட்டையும் பெற்றது.