8 ஆம்புலன்ஸ் வாகனம்: கோவை ஆட்சியர் துவக்கி வைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் அரசு சார்பில் 7 ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதனையடுத்து Bosch என்ற தனியார் நிறுவனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள 1 ஆம்புலன்ஸையும் துவக்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாய்பாபா காலனி, பீளமேடு, பாப்பம்பட்டி பிரிவு, மண்ணூர், அரசூர், சுங்கம் மற்றும் அத்திப்பாளையம் ஆகிய 7 இடங்களில் இந்த ஆம்புலன்ஸ்கள் இருக்கும் என தெரிவித்தார்.

ECRC திட்டத்தின் கீழ் 140 க்கும் மேற்பட்ட மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆதரவற்றவர்களை மீட்டு பாராமரிக்கப்பட்டு வருகின்றனர் என கூறினார். தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸை 6374713767 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கானது. குறிப்பாக பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ளவர்களை மீட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள காப்பகத்தில் கவனத்து கொள்ளலாம். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் டெலி கவுன்சிலிங் யூனிட் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.