பளு தூக்கும் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற எஸ்டிசி கல்லூரி

பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையான பளு தூக்கும் போட்டிகள் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியி நடைபெற்றது.

இதில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட 27 கல்லூரிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் எஸ்டிசி கல்லூரி மாணவர்கள் முகமது இப்ராகிம் 89 கிலோ எடைப்பிரிவில் 212 கிலோ எடை தூக்கி முதலிடத்தையும், லட்சுமனன் 102 கிலோ எடைப் பிரிவில் 237 கிலோ எடைதூக்கி முதலிடத்தையும், சோமேஷ் குமார் 109 கிலோ எடைப்பரிவில் 180 கிலோ எடை தூக்கி முதலிடத்தையும், கற்பக சோலைராஜா 81 கிலோ எடைப்பிரிவில் 183 கிலோ எடை தூக்கி முதலிடத்தையும், ராமன் 96 கிலோ எடைப்பிரிவில் 175 கிலோ எடைதூக்கி முதலிடத்தையும் பெற்றனர்.

சிவகுரு 67 கிலோ எடைப்பிரிவில் 143 எடைதூக்கி இரண்டாமிடத்தையும், கோவர்தனன் 81 கிலோ எடைபிரிவில் 168 கிலோ எடைதூக்கி இரண்டாமிடத்தையும், வெங்ட்ராமன் + 109 கிலோ எடைபிரிவில் 160 கிலோ எடைதுக்கி இரண்டாமிடத்தையும், அன்புச் செல்வன் 102 கிலோ எடைப் பிரிவில் 141 கிலோ எடை தூக்கி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர். மேலும் மேற்கண்ட மாணவர்கள் மொத்தமாக 260 புள்ளிகள் பெற்று அணி பிரிவில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர்.

சாதனை மாணவர்களை கல்லூரியின் தலைவர் விஜய மோகன், துணைத் தலைவர் சேதுபதி, செயலர் வெங்கடேஷ், முதல்வர் சோமு, முதன்மை இயக்குனர் நந்தகோபால், உடற்கல்விதுறை இயக்குனர் பாரதி, துணை இயக்குநர்கள் ரேவதி, சதாம் உசேன், பயிற்சியாளர் முனியப்பன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.