இணைய வழியில் நடைபெற்ற ‘ஹுரைரா கேர்’ கேட் ஷோ

பூனைகளுக்காக நடைபெறும் ஹுரைரா கேர் என்ற கேட் ஷோ சமீபத்தில் நடைபெற்றது.
இதில் இந்தியன், பெர்சியன் மற்றும் எக்ஸோடிக் பூனைகள் நேரலை காணொளி மூலம் காட்சிப் படுத்தப்பட்டது.

நேரலையின் மூலம் ஹுரைரா கேர் நிறுவனர்கள் முகமது ரப்பானி மற்றும் சரவணன் ஆகியோரால் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே தங்களது பூனைகளை காணொளி வாயிலாக காட்சிப்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 40 பூனையின் பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

ஹுரைரா கேட் ஷோ 2.0 போட்டியில் ஊட்டியை சேர்ந்த சரவணன், ஈரோட்டைச் சேர்ந்த முகமது ரப்பானி, பெங்களூரைச் சேர்ந்த சிவபிரசாத் நடுவர்களாக இருந்து பூனைகளை நான்கு பிரிவுகளாக தேர்வு செய்தனர்.

போட்டியில் ட்ரெடிஷ்னல் லாங் ஹேர் பிரிவில், லோகேஷ் மும்மூர்த்தி (கோவை) அவர்களுடைய போம்மி 1வது இடத்தைத் தட்டிச்சென்றது, உமா மஹேஷ்வரன் (கோவை) அவர்களுடய ரேஸ் 2 வது இடம், நக்குலா ஸ்ரீ (ஈரோடு) அவர்களுடைய தூரிகா 3வது இடம், செந்தில் ரவிசந்திரன் (ஈரோடு) அவர்களுடைய லட்டு 4வது இடம், அலிப் அப்துல் காதிர் (திருச்சி) அவர்களுடைய மைலோ 5வது இடம் பெற்றனர். பெர்சியன் மற்றும் எக்ஸோடிக் பிரிவில் ஷாஜியா (சென்னை) அவர்களுடைய ஹஸ்கி 1வது இடத்தைத் தட்டிச்சென்றது, 2வது இடத்தை நூரூதின் (சென்னை) அவர்களுடைய மார்கோ ஜூனியர் ஹன்டர், 3வது இடத்தை செந்தில் ரவிசந்திரன் (ஈரோடு) அவர்களுடைய க்யுன்னா, 4வது இடத்தை சிக்கந்தர் (புதுக்கோட்டை) அவர்களுடய பிட்டு, தட்டிச்சென்றன.

காட்சியிற்கு வந்த பூனைகளில் அனைத்து பிரிவிலும் வைத்து சிறந்த இரு பூனைகளுக்கு, ஷோ பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் விருது வளங்கப்பட்டது. இந்த விருதை ஷாஜியா (சென்னை) அவர்களுடைய ஹஸ்கி மற்றும் ரன்னர் அவார்டை ஹரிஷ் (கோவை) அவர்களுடைய சிம்பா தட்டிச்சென்றன.

நடுவர் விருப்பம் பிரிவில் பஷாரத் மஹ்மூத் (திருப்பூர்) அவர்களுடைய ஃபெரான் மற்றும் செரின் ரேஷ்மா (கோவை) அவர்களுடைய பெப்பர் பரிசுகளை தட்டிச் சென்றனர்.