வெளிநாட்டு பல்கலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்துஸ்தான் ஆசிரியர்கள் வழிகாட்டல்

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இருபது ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்ற இரு ஆசிரியர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கினர்.

பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கல்லூரி நிர்வாகத்தின் ஒப்புதலின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டு தங்களது ஆராய்ச்சி அனுபவங்களான செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆற்றல் சேமிப்பை மேம்படுத்துதல் தொழில்நுட்பத்தை ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு வழங்கினர்.

கம்ப்யூட்டர் அப்ப்ளிகேஷன் துறை பேராசிரியர் லக்ஷ்மணன் துபாயில் உள்ள ஹையர் காலேஜ் ஆப் டெக்னாலாஜிக்கு கெளவுரவ விரிவுரையாளர் ஆக சென்று ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பற்றிய தற்போதைய ஆராய்ச்சி மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி விளக்கம் அளித்ததுடன் அதன் செயல்பாடுகளை கணினி மூலம் செயல் விளக்கமும் கொடுத்தார்.

மேலும் அக்கல்லுரியின் ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை தலைவர் ஜிம்மிஸ் அஹமது கூறுகையில் பேராசிரியரின் அறிவுரை மற்றும் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று கூறினார்.

மேலும், இயந்திரவியல் துறை பேராசிரியர் மோகன்ராஜ், கஜகஸ்தானின் எஸ் நொவ் பல்கலைக்கழகத்து கௌவுரவ விரிவுரையாளர் ஆக சென்று ஆற்றல் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல் தொழில்நுட்பத்தை முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் ஆற்றல் சேமிப்பு துறை தலைவர் கல் தேவ் கூறுகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பேராசிரியரின் அறிவுரை இத்துறையை மேம்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்று கூறியதுடன் கல்லூரியின் நிர்வாகத்திற்க்கு நன்றி கூறினார்.

கல்லூரியின் தாளாளர் சரஸ்வதி கண்ணையன் கூறுகையில், ஆசிரியர்கள் வெளிநாட்டு மாணவர்களின் ஆராய்ச்சிக்கு நம் உதவுவது இந்தியாவுக்கே பெருமை என்று கூறினார்.

கல்லூரி இணை செயலாளர் பிரியா சதிஷ் பிரபு, முதன்மை அலுவலர் கருணாகரன், முதல்வர் ஜெயா மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.