அரசுப் பள்ளிகளை மக்கள் நமது பள்ளிகள் என கருதவேண்டும்

ஆற்றல் ஃபவுண்டேஷன் நிறுவனர் அசோக்

ஆற்றல் ஃபவுண்டேஷன் (சேவை நிறுவனம்) சார்பில் காங்கேயம் அருகே பழையகோட்டை புதூர் ஊராட்சி நடுநிலை பள்ளி வகுப்பறைக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு குழந்தைகள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு பழையகோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சி.எம்.சண்முகசேகரன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சுமதி முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதாமணி வரவேற்புரை ஆற்றினார். காங்கயம் வட்டாரக் கல்வி அலுவலர் சுசீலா, காங்கயம் வட்டாரவள மையப் பொறுப்பாளர் சிவக்குமார், ஆசிரியர் பயிற்றுனர் மோகன்ராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் ரஞ்சிதம், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் கிட்டுச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் ஆற்றல் சேவை நிறுவனத்தின் நிறுவனர் ஆற்றல் அசோக் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசும் போது, அரசுப் பள்ளிகளை மக்கள் அனைவரும் நமது பள்ளி என்ற உணர்வோடு கருதி பள்ளிக் குழந்தைகளின் தேவைகளை அறிந்து உதவவேண்டும். கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு ஆற்றல் ஃபவுண்டேஷன் அமைப்பானது ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் இதர தேவைகளை ஆய்வு செய்து அதை பூர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. என்பதைக் குறிப்பிட்டார். பள்ளி ஆசிரியர் சாந்தி நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு நன்றி கூறினார். 50 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.