ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி 4 வயது சிறுமி சாதனை

தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் 4 வயது சிறுமி இடம் பிடித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த இராசிபாளையம் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் அனிதா தம்பதியரின் நான்கு வயது சிறுமி அபிக்க்ஷா. தனது சிறு வயதில் இருந்து தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்ப கலையில் ஆர்வம் கொண்ட இவர் சிலம்ப பயிற்சியாளர் சந்திரன் என்பவரிடம் தொடர்ந்து கலைகளை கற்று வந்துள்ளார்.

(சான்றிதழுடன் சிறுமி அபிக்க்ஷா)

இந்நிலையில் தனது விடா முயற்சியால் தற்காப்பு கலை குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார் சிறுமி அபிக்க்ஷா. இவரது இந்த சாதனையானது நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

தொடர்ந்து அபிக்க்ஷா என்ற சிறுமி மாவட்ட மற்றும் மாநில அளவிலான நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.