வசந்தி மோட்டார்ஸின் புதிய கிளை பி.என்.புதூரில் துவக்கம்

முன்னணி இரு சக்கர வாகனமான ‘ஹீரோ’வின், டீலர் நிறுவனங்களில் ஒன்றான வசந்தி மோட்டார்ஸ் தனது புதிய கிளையை வடவள்ளி பி.என். புதூர் பகுதியில் திங்கட்கிழமை தொடங்கியுள்ளது.

புதிய கிளை திறப்பு குறித்து வசந்தி மோட்டார்ஸின் நிர்வாக இயக்குனர் பிரேம் ஆனந்த் கூறுகையில், கோவையில் இது எங்களது ஆறாவது கிளை என்றும் ஹீரோ நிறுவனமும் வசந்தி மோட்டார்சும் 11 வருடமாக இணைந்து செயல்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த புதிய கிளையில் திறப்பு விழா சலுகைகள் உள்ளன என்றும், ‘ஹீரோ’ வாகனத்தை பொறுத்தவரை அதில் அதிகம் விற்பனையாகக் கூடியது ஸ்ப்ளெண்டெர் தான். அதற்கு அடுத்தபடியாக பிளசர் (Pleasure) உள்ளது. வரும் மார்ச் மாதத்தில் ஹீரோவின் முதல் எலக்ட்ரிக் வாகனம் அறிமுகமாகவுள்ளது. மார்ச் மாதம் இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.

மேலும் ப்ரீமியம் மாடல்ஸ் எக்ஸ் பல்ஸ் – இல் 4 வோல்ட் எடிஷன் புதிதாக வந்துள்ளது எனவும், மார்க்கெட்டில் இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றும் கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், பெட்ரோல் விலை அதிகரிப்பினால் வாகனம் வாங்குவதில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டுள்ளது. ஹீரோ வாகனங்களைப் பொறுத்தவரை அவை குறைந்த பராமரிப்பு செலவினங்களையே கொண்டுள்ளன. மேலும் அதிக மைலேஜ் தரக்கூடியதாகவும் இருக்கின்றன. உலகிலேயே அதிகம் விற்பனையாகக் கூடிய இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக ஹீரோ ஸ்ப்ளெண்டெர் உள்ளது எனத் தெரிவித்தார்.

திறப்பு விழா நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் பழனிசாமி, செல்வம் ஏஜென்சிஸ் உரிமையாளர் நந்தகுமார், ஹீரோவின் ஏரியா சேல்ஸ் மனேஜர் விஜய கண்ணன், ஏரியா சர்வீஸ் மனேஜர் மகேந்திரன், ஸ்டார் ஜெராக்ஸ் உரிமையாளர் ஜனகராஜ், சிட்டி ட்ராவல்ஸ் பாஸ்கர், வடவள்ளி சண்முக சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.