கோவை மாநகர போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கோவை மாநகர போக்குவரத்து துறை சார்பில் தனியார் கல்லூரியுடன் இணைந்து கோவையில் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை இணைந்து வாகன ஓட்டிகள் சாலை விதிகளை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பது குறித்த சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில் சிக்னல் அருகே வாகன ஓட்டிகளுக்கு சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுகுணா பாலிடெக்னிக் மாணவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் ஹெல்மட் அணிவதால் ஏற்படும் பாதுகாப்பு குறித்தும் அப்போது பதாகைகள் மூலம் விழிப்பிணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பாலிடெக்னிக் கல்லூரி டீன் ரம்யா சந்தோஷ் கல்லூரி முதல்வர் கோவிந்தராஜூலு, போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் செந்தில்குமார், கிழக்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சரவணன், இ2 காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாணவர்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக கடைபிடிப்பதோடு, அது குறித்து சாலைகளில் பயணிப்போருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தினர்.