கோவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெளியிடப்பட்டது.

இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

கடந்த 2021 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வெளயிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் கோவை மாவட்டத்தில் 15,40,901 ஆண் வாக்காளர்களும், 15,91,654 பெண் வாக்காளர்களும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 573 என மொத்தம் 31,33,128 வாக்காளர்கள் உள்ளனர். 18 முதல் 19 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள் 42,266 புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் தொகுதிவாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு: மேட்டுப்பாளையம் தொகுதியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 739 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 56 ஆயிரத்து 37 பெண் வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் 48 என மொத்தம் 3 லட்சத்து 1824 வாக்காளர்கள் உள்ளனர்.

சூலூர் தொகுதியில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 865 ஆண் வாக்காளர்கள், 1லட்சத்து 64 ஆயிரத்து 705 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 3 லட்சத்து 21 ஆயிரத்து 635 வாக்காளர்கள் உள்ளனர்.

கவுண்டம்பாளையம் தொகுதியில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 305 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 39 ஆயிரத்து 21 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 141 என மொத்தம் 4 லட்சத்து 76 ஆயிரத்து 467 வாக்காளர்கள் உள்ளனர்.

கோவை வடக்கு தொகுதியில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 556 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 71 ஆயிரத்து 748 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 41 என மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 345 வாக்காளர்கள் உள்ளனர்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 381 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 71 ஆயிரத்து544 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 114 என மொத்தம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 39 வாக்காளர்கள் உள்ளனர்.

கோவை தெற்கு தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 792 ஆண் வாக்காளர்களும், 1லட்சத்து 27 ஆயிரத்து 429 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 34 பேர் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 255 வாக்காளர்கள் உள்ளனர்.

சிங்காநல்லூர் தொகுதியில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 456 ஆண் வாக்காளர்கள், 1லட்சத்து 66 ஆயிரத்து 889 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 24 பேர் என மொத்தம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 369 வாக்காளர்கள் உள்ளனர்.

கிணத்துக்கடவு தொகுதியில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 3 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 70 ஆயிரத்து 375 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 42 பேர் என மொத்தம் 3 லட்சத்து 34 ஆயிரத்து 420 வாக்காளர்கள் உள்ளனர்.

பொள்ளாச்சி தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து77 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 19 ஆயிரத்து 79 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 43 பேரு என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 199 வாக்காளர்கள் உள்ளனர்.

வால்பாறை தனித்தகுதியில் 98ஆயிரத்து 727 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 7 ஆயிரத்து 827 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 21 என மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 575 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் 6 ஆயிரத்து 884 பேர், முகவரி மாறி சென்றவர்கள் 5 ஆயிரத்து 12 பேர், இரு முறைபதிவு செய்த 1591 பேர் என 14ஆயிரத்துன 387 பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்