என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரி, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் நிதியுதவியின் மூலம் ஏபிஇ செமிகண்டக்டர் டிசைன்ஸ் கம்பெனி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.

இந்நிகழ்வில் கோவை மருத்துவ மைய மற்றும் ஆராய்ச்சிக் கல்வி அறக்கட்டளையின் செயலர் தவமணி பழனிசாமி, கல்லூரியின் அகாடமி ஆஃப் கேரியர் டெவலப்மெண்ட்டின் இயக்குனர் மதுரா பழனிசாமி, ஏபிஇ செமிகண்டக்டர் டிசைன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் அதிஃப்ஷா, கல்லூரி முதல்வர் பிரபா, உயிரி மருத்துவ பொறியியல் பிரிவு துறைத் தலைவர் சுமித்ரா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இது குறித்த பத்திரிக்கை செய்தியில் தெரிவித்திருப்பது: நிகழ்ச்சியில் செயலர் தவமணி பழனிசாமி பேசுகையில், “அறிவு, திறன், மேம்பாடு மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் மாணவர்களின் வளர்ச்சிக்கு கட்டாயமாகும். மேலும் ஒரு மடங்கு திறமை, இரு மடங்கு தேடல், மூன்று மடங்கு பொறுமை என்ற விகிதத்தில் உங்களை நீங்கள் தயார்படுத்தினால் மட்டுமே உங்கள் லட்சியத்தின் இலக்கை நீங்கள் அடைய முடியும்” என்றும் குறிப்பிட்டார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் மற்றும் இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும் கல்லூரியின் முதல்வர் பிரபா எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினர் டாக்டர் அதிஃப்ஷா கூறுகையில்: ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், இன்டர்நெட் ஆப் திங்ஸ், எம்பெட்டெட் சிஷ்டம், செமிகண்டக்டர் டிசைன்ஸ் மற்றும் மருத்துவ வளர்ச்சியில் அதன் முக்கியத்துவத்தையும் பகிர்ந்து கொண்டார். மேலும் அப்துல்கலாம் அவர்களின் மேற்கோட்டின்படி “அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும். பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது” என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பல தொழிற்பயிற்சிகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரும் என்றும் இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தரமான பொறியியலாளர்களாக இப்போட்டி நிறைந்த உலகில் வெளிவர வேண்டும் என்றும் உயிரி மருத்துவ பொறியியல் பிரிவு துறைத் தலைவர் சுமித்ரா குறிப்பிட்டார்.