தேசிய எரிசக்தி பாதுகாப்பிற்கான விருதினை பெற்ற சி.ஆர்.ஐ

பம்ப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனமான சி.ஆர்.ஐ பம்ப், தேசிய எரிசக்தி பாதுகாப்பிற்கான 2021-ம் ஆண்டு விருதினை 7 வது முறையாகவும் தொடர்ந்து 5வது முறையும் வென்றுள்ளது.

சி.ஆர்.ஐ., நிறுவனம் இதுவரை தேசிய அளவில் 2 மில்லியனுக்கும் அதிகமான நட்சத்திர குறியீட்டு பம்ப்புகளையும் 50000-க்கும் மேற்பட்ட IOT வசதி கொண்ட சோலார் பம்புகளையும் நிறுவி சாதனை படைத்துள்ளது. இதனால் தொழிற்சாலைகள், கட்டுமானத்துறையினர், விவசாயிகள் மற்றும் குடியிருப்போர் உள்ளிட்ட பலரும் அதிகளவில் மின்சாரம் மற்றும் பணத்தை சேமிக்க உதவியிருக்கிறது.

மத்திய மின்சார துறை அமைச்சர் ஆர்.கே சிங்கிடம் விருதினை பெற்றுக் கொண்ட சி.ஆர்.ஐ. குழுமத்தின் இணை நிர்வாக இயக்குனர் செல்வராஜ் கூறியதாவது: மின்சாரத்தை சேமிப்பதோடு, சிறந்த செயல் திறன்மிக்க பம்ப்புகளை சி.ஆர்.ஐ பம்ப் உற்பத்தி செய்ததற்காக இந்த தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதை 7 வது முறையாகவும், தொடர்ந்து 5வது முறையாகவும் பெற்றிருக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களும், நாடும் பெரும் மின்சாரம் வீணாவதையும், செலவுகளையும் தவிர்த்து மிச்சப்படுத்த உதவியுள்ளது. மின்சார சேமிப்பில், எங்களது விடாமுயற்சியை அறிந்து, இந்த விருதை வழங்கி கவுரவித்த இந்திய அரசிற்கு மிக்க நன்றி தெரிவித்தார்.

புதிய மட்டும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் தேவை அதிகமாக உள்ள இந்த காலகட்டத்தில் சி.ஆர்.ஐ அதிநவீன தொழில்நுட்பமான IOT வசதியுடன் கூடிய DC மற்றும் AC மோட்டார்களை கொண்டு சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் 50000-க்கும் மேற்பட்ட சிறப்பான பம்பிங் சிஸ்டம்களை பொருத்தி, மின்சாரம் சேமிக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.