வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் வளர்ச்சிப்பணிகள் குறித்து அனைத்து அலுவலர்கள், பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கோயம்புத்தூர்மாநகராட்சியில் மண்டல வாரியாக நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தெரு விளக்குகள், பூங்காக்கள், சாலைப்பணிகள், மற்றும் ஸ்மார்ட் சிட்டி, 24 x 7 குடிநீர் விநியோகம் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, பருவமழை தொடங்கும் முன்னதாகவே விரைவாகவும் நல்லமுறையிலும் பணிகளை முடிக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் அவர்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் கண்காணிப்பு பொறியாளர் என்.நடராஜன், மாநகர பொறியாளர் லட்சுமணன் மற்றும் செயற்பொறியாளர் ஞானவேல், உதவி ஆணையாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.