தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்களின் 8 ஆவது மாநில மாநாடு

சிஐடியு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் 8 ஆவது மாநில மாநாடு மே 11 ஆம்தேதி துவங்கி மே13 ஆம் தேதிவரை கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாரி உரிமையாளர் திருமண மண்டபத்தில் இம்மாநாடு நடைபெற உள்ளது.

இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர் சங்க பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கையை முன்வைத்து காக்கிசட்டை பேரணி மே.11 மாலை 3 மணிக்கு வடகோவை சிந்தாமணி முன்புறம் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்கும் பேரணி ராஜவீதி தேர்நிலைத்திடலில்நிறைவடைந்து பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்கள் பிரதிநிதிகள் மாநாடும், அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

இந்த மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் அகில இந்திய சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தில் பொதுச்செயலாளர் கே.கே.திவாகரன், சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்திரராசன், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் மற்றும் தமிழ்நாடு ஆட்டோ சங்க மாநில தலைவர் எம்.சந்திரன், செயலாளர் எம்.சிவாஜி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.