ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி பேட்மிண்டன் வீரர்களுக்குப் பாராட்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச அளவிலான பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இக்கல்லூரி மாணவர் சதீஷ்குமார் சர்வதேச அளவிலான பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், மாணவர்கள் ரூபன்குமார்-ஹரிஹரன் ஆகியோர் இணை மாநில பேட்மிண்டன் போட்டியில் முதலிடமும் பெற்றனர்.

அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் சிவக்குமார் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். இந்நிகழ்வில் துணை முதல்வர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் துணைத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.