எல்.ஐ.சி ஹவுசிங் ஃபினான்ஸ் லிமிடெட் சார்பில் வீட்டுக் கடன் கண்காட்சி

எல்.ஐ.சி ஹவுசிங் ஃபினான்ஸ் லிமிடெட் நிறுவனம் வழங்கும் உங்கள் இல்லம் 2021 வீடு மற்றும் வீட்டுக் கடன் கண்காட்சி பீளமேட்டில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கண்காட்சியினை எல்.ஐ.சி ஹவுசிங் ஃபினான்ஸ் லிமிடெட் சென்னை தெற்கு மண்டல மேலாளர் கோவிந்தராஜூ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில், கிரிக்கெட் விளையாட்டு வீரர், நடிகர் மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடியன் பாஸ்கி, எல்.ஐ.சி ஹவுசிங் ஃபினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கோவை ஆப்ரேஷன்ஸ் மேலாளர் நந்தா கிஷோர், இக்கண்காட்சியின் மெயின் ஸ்பென்ஸர் தியா ஃபௌண்டேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ ராம், ஆருத்ராஸ் டெவலபேர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் மணி மற்றும் ரவி, பயனியர் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நமோ பாலாஜி, ஸ்டீல்அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் கிளை மேலாளர் மதுசூதனன் சுரதி, சௌபர்ணிகா நிறுவனத்தின் பொது மேலாளர் விரேந்தர், எல்.ஐ.சி ஹவுசிங் ஃபினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி மேலாளர் தாரணி, வி.ஜி விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.