மாணவர்களின் வளர்ச்சியே எங்கள் பள்ளியின் வளர்ச்சி

ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது’ என்பது பாரதியார் கூற்று. ஆம், கல்விச் சேவை என்பது உலகில் மிகச்சிறந்த சேவையாகும். ஒரு குழந்தையை நல்வழிப்படுத்துபவர்கள் இரண்டு பேர். அவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள். குழந்தைகள் பெற்றோர்களைவிட பள்ளியில்தான் தன் அன்றாட வாழ்வில் அதிகம் செலவிடுகின்றனர். அதனைப் பயனுள்ளதாக மாற்றிக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை. ஏன் அந்த பள்ளியின் கடமை என்றே கூற வேண்டும்.

ஆம், ஒரு பள்ளியை உருவாக்குவது என்பது சாதாரணமான காரியம் அல்ல. நல்ல நிர்வாகம், சிறந்த ஆசிரியர்கள், தரமான கல்வி, எளிதில் புரிந்துகொண்டு சாதிக்கும் மாணவர்கள் என பல்வேறு கோணங்களை உள்ளடக்கியதுதான் ஒரு சிறந்த பள்ளியின் எடுத்துக்காட்டு. அது போன்றதொரு சிறந்த பள்ளியைக் குறித்து சிந்திக்கும்போது, நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான பள்ளிகளில் ஒருசில பள்ளிகள் தான் நம் நினைவுக்கு வரும். அவ்வாறான மிகசசிறந்த பள்ளிதான், கோவை கருமத்தம்பட்டியில் உள்ள கோவை பப்ளிக் பள்ளி. அமைதியான சூழலில் அருமையான கல்வியைக் கற்றுக்கொள்ள ஏதுவாக சிறந்து விளங்கும் இப்பள்ளியைப் பற்றி நாம் தெரிந்து கொண்ட சில தகவல்கள் உங்களுக்காக…

நீட் தேர்வுக்கு 8ம் வகுப்பு முதலே பயிற்சி

முதலில் ஒரு பள்ளி என்றால் எப்படி இருக்க வேண்டும். தரமான கல்வியுடன், பள்ளியின் பெயரைச் சொல்லலும் பொழுதே பெருமிதம் மேலோங்க வேண்டும் அல்லவா! ஏனென்றால் கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும். அதுபோன்றதொரு பள்ளியில் படிப்பதுதான் சாலச்சிறந்தது. இவ்வாறு ஒரு சிறந்த பள்ளிக்கு உண்டான அனைத்துத் தகுதிகளையும் கொண்டு விளங்கும் கோவை பப்ளிக் பள்ளியைப் பற்றி பள்ளியின் தாளாளர் எம்.பழனிசாமி என்ன கூறுகிறார் என்று கேட்போம்.

‘‘நானும் எனது நண்பர்களும் இணைந்து சென்னியாண்டவர் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலம் இப்பள்ளியை நிர்வகிக்கிறோம். பள்ளியை ஆரம்பித்தால் மட்டும் போதுமா? அதனை சிறந்த முறையில் நிர்வகிக்க ஆளுமை பொருந்திய மேலாண்  நிர்வாகிகள், சிறந்த தரமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், கற்கும் பாடங்களை எளிதில் புரிந்து சாதனை படைக்கும் மாணவர்கள், சிறந்த அலுவலக நிர்வாகம் எனும் ஒரு கூட்டணி முயற்சி தேவை. அப்படியொரு முயற்சிதான் எங்கள் பள்ளியை சிறந்த பள்ளியாக வடிவமைத்துள்ளது. போட்டிகள் நிறைந்த உலகில், எப்படி வாழ வேண்டும் என்று மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதுதான் சிறந்த பள்ளி என்று நான் கருதுகிறேன்.

இங்கு படிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் நாங்கள் பாடக்கல்விக்கு அடுத்து அவர்களின் தனித்திறமையை வளர்ப்பதற்கு ஊக்குவிப்பு அளிக்கிறோம். உதார ணமாக, ஒவ்வொரு மாணவருக்கும் யோகா, கராத்தே, தமிழ் சுலோகம், சிலம்பம், வில் வித்தை, ரேபிள் ஷூட்டிங், ஸ்கேட்டிங், நடனம், இசை போன்ற தனித்திறமை வாய்ந்த பல்வேறு திறன் கலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை திறமை வாய்ந்த பயிற்றுநர்கள் மூலம் கற்றுக் கொடுக்கிறோம். அதில், எந்தத் துறையில் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர் என்பதை ஆராய்ந்து, அதற்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட முறையிலும் பயிற்சியளித்தும் வருகிறோம்.

இதனால், அவர்களின் கல்வியுடன் தனித்திறமையும் மேலோங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அனைத்துப்  பள்ளிகளிலும் இப்பயிற்சிகளைக் கொடுக்கின்றனர். இதில் எங்கள் பள்ளியில் என்ன புதுமை என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக இருக்கிறது. நான் கூறிய தனித்திறமைகளைப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள், அந்தந்தத் துறை சார்ந்து சாதனை படைத்தவர்கள். அதனால், மாணவர்கள¢ எளிய வழிமுறையில் கற்றுக் கொள்வதோடு, அத்துறை சார்ந்து சாதனை புரிய எமது பயிற்றுநர்கள் ஊக்கம் அளிப்பார்கள் என்று நம்பிக்கை அளிக்கிறோம்.

இந்த சிறப்புமிக்க பயிற்சிகளை வழங்குவதற்கு எங்கள் மாணவர்களின் பெற்றோர்களும் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். என்னதான் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தாலும், அதனை எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் மாணவர்களுக்கு வேண்டும். இந்த விஷயத்தில் எங்களது பள்ளி மாணவர்களுக்கு ஈடு கொடுக்க யாரும் இல்லை என்றே கூறலாம். இவ்வாறு அனைத்தும் அமையப்பெற்றாலும், சிறந்த ஆளுமை இல்லை என்றால் அடிப்படையே ஆட்டம் கண்டு விடும். ஆகவே இப்பள்ளியை சிறந்த பள்ளியாக மாற்றுவதில், தலைசிறந்த ஆளுமைத் திறனும், அறிவாற்றலும் மிக்கவர்களான எமது பள்ளியின் முதன்மை முதல்வர் ராஜலட்சுமி, நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன் அவர்களின் திறமையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது’’ என்றார் பெருமிதத்துடன்.

‘‘நல்லதொரு நிர்வாகம், அந்த நிர்வாகத்திற்கு ஏற்ற ஆசிரியர்களின் ஒத்துழைப்பு ஆகிய இவை இரண்டும் இருந்தால் மட்டுமே ஒரு பள்ளி சிறந்த பள்ளியாக விளங்க முடியும்’’ என்றார் பள்ளியின் நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. எங்கள் பள்ளியின் தனித்துவம், எங்களது மாணவர்கள்தான். ஆம், இங்கே பயிலும் மாணவர்கள் அனைவரும் எளிதில் எதனையும் கற்றுக்கொள்ளும் கூர்மையான ஆற்றல் அறிவு கொண்டவர்கள். ஆகவே மாணவர்கள்தான் எங்கள் பள்ளியின் பலம்.

பள்ளியின் முதன்மை முதல்வர் ராஜலட்சுமி கூறுகையில், பொதுவாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் ஒரு ஆசிரியராக இருப்பதைவிட, அவர்களுக்கு நல்லதொரு தாயாக இருப்பதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்.

ஆம். NEET, JEE, IISER, NISERI, ICT, IISC, IIIT, NDA, UCEED, CLAT  போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே சிறந்த பயிற்சியாளர்களைக்  கொண்டு பயிற்சியளிக்கிறோம். இதனால் உலகளாவிய அளவில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வாழ்வில் வெற்றி பெற முடியும்.

அதுமட்டுமல்ல, தற்பொழுது வணிகத்துறையில் அதிகளவில் வேலைவாய்ப்பு பெருகி வருவதால், அத்துறை சார்ந்து பல கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களைத் தேர்ந்தேடுகின்றனர். இதனை எங்கள் பள்ளி மாணவர்கள் உறுதியுடன் எதிர்கொள்ள வணிகத் துறை சார்ந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது என்பதை இங்கே பெருமிதத்துடன்  கூறிக்கொள்கிறேன்.

மேலும், கடந்த ஆண்டு உயர்நிலைப்  பள்ளியாக இருந்த எங்கள் பள்ளி இந்த ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம்  உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும்  இங்கே மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் தொலைதூரத்தில் இருந்து எமது பள்ளியில்  படிக்க விரும்பிவரும் மாணவர்களுக்குத்  தரமான உணவு, காற்றோட்டமான சூழ்நிலை, சிறந்த பாதுகாப்பு என அனைத்து வசதிகளும் அடங்கிய, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட “மாணவர் விடுதி”யும் உள்ளது.