பி.எஸ்.ஜி மருத்துவமனையில் இயற்கை மருத்துவ தினம்

மீண்டும் திரும்புவோம் இயற்கை வாழ்க்கைக்கு!

பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நான்காவது தேசிய இயற்கை மருத்துவ தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் நவம்பர் 18 ம் தேதியை இயற்கை மருத்துவ தினமாக அறிவித்துள்ளது.

“மாறிவரும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் தவறான உணவு பழக்கங்கள் காரணமாக உடல் நல குறைபாடுகளுக்கு ஆளாகிறோம். நமது வாழ்க்கை முறையின் அடிப்படை விஷயங்களான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி, மன அழுத்தம் மற்றும் ஓய்வு ஆகியவற்றில் வேண்டிய மாற்றங்கள் செய்வதுடன், இயற்கை மருத்துவ சிக்கிச்சைகளான நீர் சிகிச்சை, அக்குபஞ்சர், மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, யோகா பயிற்சிகளும் மேற்கொள்ளும்போது உடல் மற்றும் மனம் சார்ந்த உபாதைகளிலிருந்து விடுபட்டு நலமாக வாழலாம்” என பி.எஸ்.ஜி மருத்துவமனை தெரிவிக்கிறது.

இது குறித்து பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர் சுபாஷினி கூறுகையில்: இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும், ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உணவுப் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் நமது இயற்கை வாழ்க்கை முறைக்கு திரும்ப வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்திய இயற்கை மருத்துவத்தின் தந்தை என மகாத்மா காந்தி அழைக்கப்படுகிறார். அவர் தனது வாழ்வில் இயற்கை மருத்துவத்தையே அதிகளவில் பின்பற்றி வாழ்ந்தார்.

மூன்று நேரமும் சமைத்த உணவுகளையே உண்பதை விட, ஒரு நேரம் மட்டும் பச்சை காய்கறிகள், பழங்களை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மருந்தில்லா மருத்துவ முறை மூலம் நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, ஸ்வீடிஷ் மசாஜ் சிகிக்சை, அக்குபஞ்சர், யோகா போன்ற சிகிச்சை முறைகள் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் வழங்கப்படுகின்றன. ஆஸ்துமா, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், முதுகுவலி, மாதவிடாய் கோளாறுகள், சரும நோய்கள், தைராய்டு, தூக்கமின்மை, தலைவலி, மன அழுத்தம், உடற்பருமன் போன்றவற்றிக்கு மருந்தில்லமால் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இதில் பக்கவிளைவுகள் ஏற்படாது.

ஒவ்வொருவரின் நோயின் தன்மைக்கு ஏற்றவாறு சிகிச்சை வழங்கப்படுகிறது. நோய் வராமல் தடுத்தல், நோய் வந்தபின் குணப்படுத்தல் என்ற இருவகையில் இயற்கை மருத்துவத்தில் சிகிச்சை வழங்கப்படுகின்றன. இந்த இயற்கை மருத்துவத்தை இளம் வயதினர் தொடங்கி வயதானவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். வாரம் மற்றும் மாதம் என இருவகையாக ட்ரீட்மென்ட் பேக்கேஜுகள் வழங்கப்படுகின்றன எனக் கூறினார்.

முன்பதிவிற்கு: 82200 13330, 0422 – 4345436/37/47