ரோட்டரி மெட்ரோபாலிஸ்: வேலைவாய்ப்பு பயிற்சி நிறைவு நாள்

ரோட்டரி கிளப் ஆப் கோவை மெட்ரோபாலிஸ், இலவச வேலை வாய்ப்பு பயிற்சியினை 20 மாணவர்களுக்கு அளித்துள்ளது. இதன் நிறைவு நாள் கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது. தலைவர் Rtn. பழனியப்பன், புராஜக்ட் சேர்மன் Rtn ஜூக், செயலாளர் Rtn பாஸ்கர், மாவட்ட நிர்வாகி Rtn. குமரேசன் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

இதற்கு முன்னதாக 25 மாணவர்களைக் கொண்ட ஒரு பிரிவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பிற்கான பணி நியமன ஆணை கோ இன்டியா வளாகத்தில் அளிக்கப்பட்டுள்ளது. பின்பு இரண்டாவது பிரிவாக கோ இன்டியா 20 மாணவர்களை தேர்வு செய்து ரோட்டரி கிளப் ஆப் கோவை மெட்ரோபாலிஸ் மூலமாக இலவச பயிற்சிக்கு சி.என்.சி மெஷின் ஆப்ரேட்டேர் மற்றும் ப்ரோக்ராம்- க்கு அனுப்பியுள்ளது.

பயிற்சி முடித்த அனைவருக்கும் கோவை சுற்று வட்டாரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் கோ இன்டியா மூலமாக வேலைவாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.