Hair Conditioner: வழுக்கை, முடி உதிர்வை ஏற்படுத்துமா?

கூந்தலை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும் மாற்ற ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்தும் வழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால், வழுக்கை, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே மிகவும் கவனம் தேவை.

ஹேர் கண்டிஷனரை பயன்படுத்துவதால் முடி உதிர்வு ஏற்படுமா?

ஹேர் கண்டிஷனர் முடி உதிர்வை ஏற்படுத்தாது. ஆனால், சரியான முறையில் ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால் முடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம். நீண்ட மற்றும் அடர்த்தியான முடியைப் பெறவும் உதவுகிறது. இருப்பினும், ஹேர் கண்டிஷனரை தவறாகப் பயன்படுத்துவதால் முடி வேர்கள் மிகவும் பாதிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முடியின் நுனியில் மட்டுமே ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும்.  உங்களுக்கு நீளமான முடி இருந்தால், முடியின் கீழ் முனையிலிருந்து நடுத்தர பகுதி வரை, அதாவது, முடியின் நீளத்தில் மூன்றில் இரண்டு பங்கு பகுதியில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

கூந்தலுக்கு கண்டிஷனரைப் பயன்படுத்திய பிறகு, பெரிய பற்களை கொண்ட சீப்பு அல்லது விரல்களால் முடியை கோதி விடவும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் தலைமுடியை நன்கு கழுவவும். ஹேர் கண்டிஷனரை உச்சந்தலையில் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே சமயம், எண்ணெய் பசை மற்றும் மெல்லிய கூந்தல் உள்ளவர்களும் ஹேர் கண்டிஷனரை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

முடிக்கு ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்துவதன் நன்மைகள்: 

1. ஹேர் கண்டிஷனர் முடி உதிர்வதைத் தடுக்கிறது. ஏனெனில் இது முடியின் ஆழத்தில் சென்று கண்டிஷனிங் செய்கிறது.

2. ஹேர் கண்டிஷனர் முடியை மென்மையாக்குகிறது. இதனால் உங்கள் தலைமுடி உதிர்வது குறையும்.

3. ஹேர் கண்டிஷனர் முடியின் புரதம், எண்ணெய் பசை மற்றும் ஈரப்பதத்தை காக்கிறது.

4. முடியை பளபளப்பாக வைக்கிறது.

5. ஹேர் கண்டிஷனரை சரியான முறையில் பயன்படுத்தினால், முடி உதிர்தல் பிரச்சனை முடிவுக்கு வரும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது.