கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் துவக்கம்!

கோவை சின்னவேடம்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை மாநகராட்சி ஆணையாளார் ராஜ கோபால் சுன்கரா இன்று (12.10.2021) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

பின்னர் கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தை மாநகராட்சி ஆணையாளார் வழங்கினார். அதனை தொடர்ந்து பேசுகையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமில் 21 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கண், மூக்கு சம்பந்தப்பட்ட பரிசோதனைகள், கொரோனா தடுப்பூசி, கொரோனா பரிசோதனை, பல்வேறு சிகிச்சைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இலவச இரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், இ.சி.ஜி மற்றும் எக்கோ பரிசோதனைகளும் செய்யப்படும். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் முகாமிலேயே முதல் சிகிச்சையும், மருந்துகளும் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு ஆரம்ப நிலையிலேயே நோய்கான சிகிச்சையும், ஆலோசனையும் பெற்று வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளார் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.

இச்சிறப்பு முகாமில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அருணா, மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் வசந்த் திவாகர், வடக்கு மண்டல உதவி ஆணையாளர் மோகனசுந்தர், உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன், மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.