பாரதியார் பல்கலையில் இறகுபந்து போட்டி

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி துறை மற்றும் தேசிய சேவை திட்டம் சார்பாக இளைஞரின் எழுச்சி நாளையொட்டி மாவட்ட அளவிலான பாரத ரத்னா APJ அப்துல்கலாம் பேட்மிண்டன் ரோலிங் ட்ராபி போட்டிகள் நடைபெற்றது.

இதில் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் காளிராஜ் மாணவர்களுடன் பேட்மிண்டன் விளையாடி தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.

கொரோனா கால விதிமுறைகளுக்கு உட்பட்டு, போட்டியாளர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் மற்றும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பிறகு அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக பல்கலைக்கழகத்தின் சார்பில் உடற்கல்வி துறை தலைவர் மற்றும் பதிவாளர் முருகவேல், துணை வேந்தர், பேராசிரியர் ஆகியோர் மாணவர்களுக்கு மூலிகை முக கவசங்களை வழங்கினர்.

இதில் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அண்ணாதுரை உட்பட பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.