8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இசைக் கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு

மாதந்தோறும் உதவித்தொகை உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாதஸ்வர, தவில் இசைக் கலைஞர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்கட்கிழமை மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாதஸ்வர மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் இன்று வந்து ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவில் திருவிழாக்கள் எதுவும் நடப்பதில்லை. திருமணங்களும் எளிமையாக நடத்தப்படுகிறது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே அரசு நலத்திட்டங்கள் மூலம் எங்களை காப்பாற்ற வேண்டும்.

அனைத்து இசைக் கலைஞருக்கு மாதம்தோறும் உதவித் தொகை அளிக்க வேண்டும். நாதஸ்வரம் தவில் உள்ளிட்ட இசைக்கருவிகளை விலையில்லாமல் அரசு வழங்க வேண்டும். 58 வயது நிறைந்த மூத்த கலைஞர்களுக்கு உதவித் தொகை அளிக்க வேண்டும். உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.