தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் நாட்டு நலப் பணித்திட்ட விழா

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 53-வது நாட்டு நலப்பணித்திட்ட தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளார் கிருஷ்ணமூர்த்தி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களைப் பாராட்டி, தூய்மை இந்தியா, இரத்ததானம் மற்றும் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு திட்டம் போன்றவற்றைப் பற்றி எடுத்துரைத்தார்.

கோவை சாந்தி ஆசிரமம் தலைவர் டாக்டர் கெஸிவினோ ஆரம் தனது சிறப்புரையில் நாட்டு நலப்பணித்திட்டத்தில் மாணவர்கள் தலைமைத்துவப் பண்புகள் மற்றும் மனவலிமை பெற்று சமுதாய தொண்டாற்ற வெண்டும் என எடுத்துரைத்தார். இப்பெருந்தொற்று காலத்திலும் மாணவர்கள் சேவை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. சிறப்பு முகாம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட சேவைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பல்கலைக்கழக வேளாண்மை முதன்மையர் கல்யாணசுந்தரம் உன்னத மனிதர்களின் சுயசரிதையை படித்து மாணவர்கள் சேவை உணர்வோடு செயல்பட வெண்டும் என எடுத்துரைத்தார்.

பல்கலைக்கழக அதிகாரிகள், துறைத்தலைவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.